Sunday, January 12, 2020

Fearless Fearless Fearless are We - அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

Fearless Fearless Fearless are we!
Even when the whole world rallies against us
Fearless Fearless Fearless are we!
Even when they think we don't matter and mock us
Fearless Fearless Fearless are we!
Even when reduced to begging for sustenance
Fearless Fearless Fearless are we!
Even when we lose all that we hold dear
Fearless Fearless Fearless are we!

Even when perky bosomed lasses blink their eyes at us
Fearless Fearless Fearless are we!
Even when friends feed us poisonous fare
Fearless Fearless Fearless are we!
Even when uniformed forces stand in front of us
Fearless Fearless Fearless are we!
Even when the sky crashes down on our heads
Fearless Fearless Fearless are we!

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

 கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

Thursday, June 21, 2007

The bliss of Solitude - பிழைத்த தென்னந்தோப்பு

Amidst the green fields, along the bank of a pond
With not a soul in sight, I came to be alone.
In the storm that had passed - trees,innumerable
like transplanted seedlings, were strewn around.
In a small patch of land - a grove of coconut trees,
a sharecropper's livelihood - the storm had left alone.
A few had fallen, but many trees were untouched
let them live, had decided the God of Winds.
I have found solitude - it has its own meaning.
Solitude I've often found - has an essence of its own.
The ray that drives away the cold - is it not the nectar of life?
Majestic was the sun in the sky, spreading rays of happiness
that cheered the grains to sway in a song
I stood in the shade, amongst the trees that were left,
And understood, that in verse do I find eternal bliss.
Praise thee, goddess, those that praise thee live on,
Praise thee goddess, these are my words, forget not.


வயலிடையினிலே - செழுநீர் மடுக் கரையினிலே,
அய லெவருமில்லை - தனியே, ஆறுதல் கொள்ள வந்தேன்.
காற்றடித் ததிலே - மரங்கள் கணக்கிடத் தகுமோ?
நாற்றி நைப்போல - சிதறி நாடெங்கும் வீழ்ந்தனவே,
சிறிய திட்டையிலே - உளதோர், தென்னஞ் சிறு தோப்பு
வறியவ னுடைமை - அதனை வாயு பொடிக்கவில்லை
வீழ்ந்தன சிலவாம் - மரங்கள், மீந்தனபலவாம்;
வாழ்ந்திருக்க வென்றே அதை வாயு பொறுத்துவிட்டான்
தனிமை கண்டதுண்டு- அதிலே, சார மிருக்கு தம்மா!
பனிதொலைக்கும் வெயில் - அதுதேம் பாகுமதுர மன்றோ?
இரவி நின்றதுகாண் விண்ணிலே, இன்பவொளித்திரளாய்
பரவி யெங்கணுமே - கதிர்கள், பாடிக் களித்தனவே,
நின்ற மரத்திடையே - சிறியதோர் நிழலினில் இருந்தேன்;
என்றும் கவிதையிலே - நிலையாம், இன்பம் அறிந்து கொண்டேன்,
வாழ்க பராசக்தி!- நினையே வாழ்த்திடுவார் வாழ்வார்;
வாழ்க பராசக்தி! - இதையென், வாக்கு மறவாதே!

Thanks to Lalita Mukherjea and Zero for refining the translation.

Friday, July 14, 2006

காற்று வெளியிடைக் கண்ணம்மா - In this breezy expanse, Kannamma

In this breezy expanse Kannamma - I
feel blissful thinking of your love- Luscious
lips like a fount of honey -Moon
like eyes with serenity - Gold
like skin shining with brilliance - in this
world till I live - these will absorb
me, thinking of nothing else - make me
feel like a celestial being.

You are my life Kannamma - I will
sing thy praise every moment
All my sadness, my sorrows vanish - When
I see the lustre of your presence
I feel the nectar of love in my lips - when
I whisper thy name Kannamma
You're the light lit by the fire of my soul
You're my thought, my purpose in life.


காற்று வெளியிடைக் கண்ணம்மா, - நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன் - அமு
தூற்றினை யொத்த இதழ்களும் - நில
வூறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக் (காற்று)

நீயென தின்னுயிர் கண்ணம்மா! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன்
வாயினி லேயமு தூறுதே - கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்
தீயினி லேவளர் சோதியே - என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக் (காற்று)

Thursday, May 25, 2006

Resolute Mind I seek - மனதிலுறுதி வேண்டும்

Resolute mind I seek
Refined words I seek
Considerate thoughts I seek
Coveted things to be mine I seek
Dreams that turn real I seek
And turn real soon I seek
Wealth and happiness I seek
Fame in this world I seek
Clarity of vision I seek
Determination in work I seek
Women's liberation I seek
Protection of the creator I seek
Growth of this land I seek
Vision of heaven I seek
Triumph of truth I seek
Om Om Om Om

மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்.

Tuesday, May 09, 2006

காணி நிலம் - An acre of land

காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும், - அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்கு
கேணியருகினிலே - தென்னைமரம்
கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும், - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.

பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டுதர வேணும் - அந்தக்
காட்டு வெளியினிலே - அம்மா! நின்றன்
காவலுற வேணும், - என்றன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.

An acre of land do I want - Goddess
An acre of land do I want - There
with carved pillars - balconies
painted in pristine white - In that
acre of land - such a house
do I need to be built - with
coconut trees hugging the well - ripe
with tender coconuts.

A dozen or so - Coconut trees
do I want nearby - like
the shine of flawless pearl - moonlight
do I want to be with me, the cooing
of the cuckoo - do I want to
grace my ears - to make
my soul happy - soft, gentle
breeze should be there too.

To sing songs of pleasure - there
I want a chaste damsel with me - In
our joyous union - verses
should flow freely - In
that sylvan locale - Goddess! Your
benign presence I need - With my
poetic abilities - should
this world be graced.